Advertisement

வடமாநிலங்களில் சீக்கியர் கோபத்தால் காங்கிரஸ் தோற்கும்


சீக்கியர்களின் கோபம், காங்கிரசுக்கு மக்களவை தேர்தலில் பின்னடைவை ஏற்
படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறை வழக்கில் காங்
கிரஸ் தலைவர் ஜெகதீஷ் டைட்லர் குற்ற மற்றவர் என சிபிஐ அறிக்கை தாக்கல்
செய்தது.

இந்த அறிக்கை சீக்கியர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக
ஜர்னல் சிங் என்ற நிருபர் ஆத்திரம் அடைந்து மத்திய உள்துறை அமைச்சர்
ப.சிதம்பரம் மீது செருப்பு வீசினார். சீக்கியர்கள் வன்முறை வழக்கு
அறிக்கை தொடர்பாக சில நாட்களுக்கு முன்னர் ஜலந்தரில் உள்ள காங்கிரஸ்
அலுவலகம் தீவைத்து எரிக்கப்பட்டது. சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை
வழக்கு கள் தொடர்பாக சீக்கிய தலைவர்கள் புதனன்று கூடி விவாதித்தனர்.

மத்திய அமைச்சர் சிதம்பரம் மீது ஷூ வீசியது தொடர்பாக தான் வருந்துவதாக
வும், ஆனால், தனது உணர்வு நியாயமா னது என்றும் நிருபர் ஜர்னல் சிங்
தெரிவித்தார். ஜர்னல் சிங் அமைச்சர் மீது செருப்பு வீசிய விவகாரம்,
காங்கிரஸ் தலைவர்களின் மீது சீக்கியர்களுக்கு உள்ள அதிருப்தியை
வெளிப்படுத்துவதாக உள் ளது என அரசியல் நோக்கர்கள் கருது கின்றனர்.

சீக்கியர்களின் கோபம் வரும் மக்க ளவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு
பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளில் குற்றம்
சாட்டப் பட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு இந்த மக்களவை தேர்தலில் போட்டியிட
சீட் தரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சீக்கி யர்களிடம் பெரும் அதிருப்தியை
ஏற் படுத்தியுள்ளது.

0 comments:

Leave a Reply

கருத்துப்படம்

கருத்துப்படம்

16 தொகுதியிலே!

16 தொகுதியிலே!

காணொளி

4795+ தமிழர்களின் புதைகுழிகள்